11ம் தேதியன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகள் 2,092 மற்றும் 712 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு 1,54,220 பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதிவரை அதிகாலை 2 மணி வரை 6,049 பேருந்துகளில் 3,32,695 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் பவுர்ணமியை ஒட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணிகள் பெருமளவில் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர்.
இதனால் சென்னை கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு மற்றும் அடையாறு பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்ல பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பயணிகள் சிரமமின்றி தங்கள் பயணத்தை மேற்கொள்ள விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் சார்பாக இந்த 4 பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வழக்கமாக இயக்கக் கூடிய 244 பேருந்துகளுடன் கூடுதலாக 504 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டன.
The post தமிழ்வருடப் பிறப்பு தொடர் விடுமுறை 3 நாட்களில் 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.
