2024-ல் இந்தியா – சிங்கப்பூர் இடையே 55 லட்சம் பயணிகள் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர். சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியப் பயணிகள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் 16 நகரங்களுக்கு வாரத்துக்கு 280 விமானங்கள் இயக்கப்படுகின்றன.