கோயில் கொடை விழாவையொட்டி ஓட்டப்பிடாரத்தில் மாட்டுவண்டி குதிரைவண்டி எல்கை பந்தயங்கள்

ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரத்தில் கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயங்கள் நடைபெற்றது. ஓட்டப்பிடாரத்தில் உலகாண்டேஸ்வரி கோயில் கொடை விழா மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடந்தது.

ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் சாலையில் நடந்த இந்த போட்டிக்கு முன்னாள் எம்எல்ஏ மோகன் தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்யேசுதாசன், அதிமுக இளம்பெண்கள் பாசறை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரிய மாட்டுவண்டி போட்டியில் 10 வண்டிகள் கலந்து கொண்டன. இப்போட்டியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் முதல் பரிசை வைப்பார் மணிகலா வண்டியும், 2வது பரிசை சீவலப்பேரி துர்காம்பிகை வண்டியும், 3வது பரிசை கம்பத்துப்பட்டி பால்பாண்டி மாட்டு வண்டியும் பெற்றன.

தொடர்ந்து 20 வண்டிகள் பங்கேற்ற சிறிய மாட்டுவண்டி போட்டியை கடம்பூர் ஜமீன்தார் அருண்ராஜா தொடங்கி வைத்தார். இதில் முதல் பரிசை சீவலப்பேரி துர்காம்பிகை மாட்டுவண்டியும், 2வது பரிசை மீனாட்சிபுரம் பால்முனிசாமி வண்டியும், 3வது பரிசை புதூர்பாண்டியாபுரம் செல்வமுத்து விநாயகர் மாட்டு வண்டியும் அடுத்தடுத்து வந்து பெற்றது.

குதிரை வண்டி போட்டியில் 20 வண்டிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியை ஓட்டப்பிடாரம் பஞ். முன்னாள் தலைவர் இளையராஜா தொடங்கி வைத்தார். முதல் பரிசை நெல்லை கீழபாட்டம் ராஜாத்தி வண்டியும், 2வது பரிசை நெல்லை தச்சநல்லூர் நவீன் வண்டியும், 3வது பரிசு மற்றும் 4வது பரிசை திருச்செந்தூர் குருநாதர் வண்டியும் பெற்றது.

The post கோயில் கொடை விழாவையொட்டி ஓட்டப்பிடாரத்தில் மாட்டுவண்டி குதிரைவண்டி எல்கை பந்தயங்கள் appeared first on Dinakaran.

Related Stories: