டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, ஏப்.11: தர்மபுரியில், டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விற்பனையாளர் நலச்சங்க கவுரவ தலைவர் அதிபதி தலைமை வகித்தார். இதில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, அரசு பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜன், பெரியசாமி ஆகியோர் கோரிக்கைளை விளக்கி பேசினர். மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட தலைவர் தினகரன், ஒருங்கிணைப்பாளர் முருகன், மாவட்ட செயல் தலைவர் வெங்கடேசன், பாலசுப்பிரமணியன், ஜெயவேல், ராஜ்குமார், வேலு, ஏசுராஜா, வின்சென்ட், பழனி, குணசேகரன், கேசவன், ஜெயராமன், குமார், கோவிந்தன், அம்பிகாபதி, தங்கராசு, வஜ்ரவேல், நாகராஜ், மகேஷ், வஜ்ரம், ரவி உள்ளிட்டோர் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

The post டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: