கோவை: கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று அளித்த பேட்டி: உச்ச நீதிமன்றம் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து இருப்பது தமிழ்நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டக் கூடிய ஆளுமையாக வழிகாட்டக் கூடிய தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார். முதல்வர் சிறப்பான ஒரு முன்னெடுப்பை எடுத்து நீதிமன்றத்தின் மூலம், அதனை நிலை நாட்டி இருக்கிறார். இது ஒரு வரலாற்று சாதனையாக நாங்கள் பார்க்கிறோம். நீதிமன்றம் மூலம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முதல்வர் பெற்று தந்து இருக்கிறார்.
தட்டுப்பாடு காரணமாக மின் வெட்டு என்ற புகார் இதுவரை இல்லை. ஏதாவது பழுது காரணமாக மின்வெட்டு ஏற்பட்டு இருக்கலாம். தேவைக்கு அதிகமான மின்சாரம் தற்போது நமக்கு கிடைத்துக் கொண்டு இருக்கிறது. கோடை காலத்தில் மிக சிறப்பாக எந்த விட தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் கிடைக்க வழிவகை செய்து கொடுக்கிறோம்.
The post கோடை காலத்தில் தடையில்லாத மின்சாரம் தருகிறோம்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.