பெண் இன்ஜினியர் தற்கொலை; பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி டிரான்ஸ்பர்: தற்கொலைக்கு தூண்டியதாகவும் வழக்கு

தஞ்சை: தஞ்ைச மாவட்டம் நடுக்காவேரியை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் தினேஷ்(32), மகள்கள் மேனகா(31), கீர்த்திகா(29). இவர் இன்ஜினியரிங் பட்டதாரி. சகோதரிகள் இருவரும் அரசுப்பணி தேர்வுக்காக படித்து வந்தனர். இந்நிலையில் அய்யாவு, மதுபாட்டில்களை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த தினேஷ், தனது தந்தையிடம் மதுபாட்டில்கள் விற்பனை செய்து தர சொன்ன நபர்களிடம் கடந்த 4ம் தேதி தகராறு செய்ததோடு, அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தினேஷின் மாமா இறந்து விட்டார். இதனால் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அன்று காலை நடுக்காவேரி பேருந்து நிறுத்தத்தில் குடும்பத்தினருடன் தினேஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நடுக்காவேரி போலீசார், அடிதடி வழக்கு விசாரணைக்காக வர வேண்டும் என கூறி தினேசை மோட்டார் சைக்கிளில் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு புகார்தாரரும் வந்திருந்தார்.

அப்போது நடந்த ேபச்சுவார்த்ைதயில், தனது தங்கைக்கு நாளை மறுநாள்(இன்று) நிச்சயதார்த்தம் என கெஞ்சியதால் புகார்தாரர் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இன்ஸ்பெக்டர் இதை ஏற்காமல் பொது இடத்தில் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறி வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தார். இதுதெரிந்த தினேஷின் சகோதரி மேனகா, கீர்த்திகா காவல் நிலையத்துக்கு வந்தனர். அப்போது மேனகா தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அதனால் தனது சகோதரனை விட்டு விடுங்கள் என்று இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் கூறி அழுதுள்ளார். மேலும் கீர்த்திகாவும் தனது சகோதரனை விடுவிக்கும்படி வலியுறுத்தி உள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர், இருவரையும் சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மேனகா, கீர்த்திகா இருவரும் காவல் நிலையம் முன்பு விஷம் குடித்தனர்.

இதில் அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று காலை சிகிச்சை பலனின்றி கீர்த்திகா இறந்தார். மேனகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திரண்டனர். கீர்த்திகா உடலை வாங்க மறுத்து, மரணத்திற்கு காரணமான இன்ஸ்பெக்டர் சர்மிளாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், புதுக்கோட்டை சிறையில் இருந்து தினேசை விடுவிக்க வேண்டும் என கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சர்மிளா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இன்று ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ இலக்கியா விசாரணை நடத்த உள்ளார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சர்மிளாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி எஸ்பி ராஜாராம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.

The post பெண் இன்ஜினியர் தற்கொலை; பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி டிரான்ஸ்பர்: தற்கொலைக்கு தூண்டியதாகவும் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: