வட தமிழகத்திற்கு சூடான வானிலை எச்சரிக்கை.. ஏப்.11,12ல் வெப்பம் கடுமையாக இருக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்!!

சென்னை: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கோடைகாலம் தொடங்கி, வெயில் வாட்டத் தொடங்கி விட்டது. எதிர்வரும் நாள்களில் வெயில் இன்னும் அதிகமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;

“கர்நாடகா ரயலசீமா/கர்நாடகத்தின் உள்புறப் பகுதிகளின் வடமேற்கிலிருந்து வரும் வறண்ட காற்று, தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை(மேற்கு உள்புறம்), திருவள்ளூர் மாவட்டங்களை வந்தடையும். இதனால் இப்பகுதிகளில் அடுத்த 4 – 5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக வருகிற வெள்ளி மற்றும் சனிக்கிழமை(ஏப். 11, 12) மிகவும் வெப்பமான நாட்களாக இருக்கும். சென்னை மீனம்பாக்கம் இந்த ஆண்டில் முதல்முறையாக 40 டிகிரி செல்சியஸை பதிவு செய்யக்கூடும். வேலூரில் 41+ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் இருக்கும்”. என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post வட தமிழகத்திற்கு சூடான வானிலை எச்சரிக்கை.. ஏப்.11,12ல் வெப்பம் கடுமையாக இருக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்!! appeared first on Dinakaran.

Related Stories: