சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தாவாந்தெருவில் தெரு நாய்கள் கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தெரு நாய்கள் கடித்து காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து தெரு நாய்களை நகராட்சி அலுவலர்கள் பிடித்து குப்பை கிடங்கில் அடைத்து வைத்துள்ளனர்.