இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரஜினிகாந்த் உள்ளிட்ட 28 வழக்கறிஞர்களும், 4 காவல்துறை அதிகாரிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கறிஞர்கள் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், தங்கள் தரப்பு வாதங்களை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்தார். அப்போது, இந்த மோதல் சம்பவத்தின் போது நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தானும் ஒரு வழக்கறிஞராக இருந்து நேரில் பார்த்ததாக நீதிபதி குறிப்பிட்டார். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார்.
The post 2009ல் நடந்த போலீசார்-வழக்கறிஞர்கள் மோதல் வழக்குகளை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ஐகோர்ட்டில் மனு: தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.