பதிலுரை முடிந்த பின் பேசிய ஆர்.பி. உதயகுமார், பொதுக் கூட்டத்தில் பேசுகிற மாதிரி பத்து ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். ஒன்றும் செய்யாமல் எப்படி 10 ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும் என்றார். இதையடுத்து பேசிய அமைச்சர் பொன்முடி, ‘‘பொதுக் கூட்டத்தில் பேசுகிற மாதிரி பேசுகிறார் என்று சொல்கிறார், அவர்கள் ஆளும் கட்சியாக இருக்கும்பொழுது, அவர்களும் இதுமாதிரி பேசியிருக்கிறார்கள். நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுது, நாம் அந்த மாதிரி கேள்விகளை கேட்டிருக்கிறோமே தவிர, இந்த மாதிரி எதிர்ப்புகள் கண்டிப்பான முறையில் நாங்கள் சென்னது இல்லை. பொதுக் கூட்டத்தில் பேசுவது போல எதுவும் கிடையாது என்றார்.
The post பத்து ஆண்டுகள் எதுவுமே செய்யவில்லை என்பதா? ஆர்.பி.உதயகுமார் அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் appeared first on Dinakaran.