சிவகங்கை, ஏப்.9: நாளை மகாவீர் ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மேலும் மதுக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள், லைசென்ஸ் பெற்ற மதுபானக் கூடங்கள், ஹோட்டல்கள் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் நாளை ஒரு நாள் மூடப்பட்டிருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாளை டாஸ்மாக் விடுமுறை appeared first on Dinakaran.