குமாரபுரம், ஏப்.9: தக்கலை மூலச்சல் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் கிறிஸ்டோபர். இவரது மனைவி வின்சி(32). இவர்களுக்கு மிட்லினா (4) என்ற மகள் உள்ளார். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக வின்சி, தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வெளியே சென்று விட்டு வருவதாக கூறி குழந்தையுடன் சென்ற வின்சி மாயம் ஆனார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து வின்சியின் தாயார் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வின்சியின் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வின்சியின் உறவினர்கள், தோழிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post தக்கலை அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.