குளச்சல்,ஏப்.9: தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததை வரவேற்று குளச்சலில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர். தமிழக சட்டமன்றத்தில் 2 வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியது தொடர்பாக தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியது செல்லாது என உச்ச நீதிமன்றம் தமிழக ஆளுனருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் குளச்சலில் நகர தி.மு.க.செயலாளர் நாகூர்கான் தலைமையில் தி.மு.க.வினர் அண்ணா சிலை சந்திப்பில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
நகர்மன்ற தலைவர் நசீர் முன்னிலை வகித்தார்.மாவட்ட துணைச் செயலாளர் அர்ஜூனன், மாவட்ட பிரதிநிதி ஆல்பி, நகர இளைஞர் அணி முகம்மது சாலி, மாணவர் அணி அப்துல்லா மற்றும் அல்தாப், ஜகாங்கீர், கலீல் ரகுமான், பாதுஷா, ஜானி, குளச்சல் கர்ணன், சபின், செந்திலரசு, பீர்முகம்மது, லூலூ சபிக் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post தமிழக ஆளுனருக்கு எதிராக தீர்ப்பு தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.