கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெண் பயணி தவறவிட்ட ரூ.73 ஆயிரம் ஒப்படைப்பு: டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு


கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெண் பயணி தவறவிட்ட ரூ.73 ஆயிரம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பணத்தை ஒப்படைத்த டிரைவர், கண்டக்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.  வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளது. இங்கு, வெளியூர் செல்ல வந்த பெண் பயணி ஒருவர், நேற்று தனது கைபையை தவறவிட்டுள்ளார். அந்த பையில் ரூ.73,000 இருந்துள்ளது. பையை எங்கே தவறவிட்டோம் என தெரியாததால் கதறி அழுதபடி அந்த பெண் பேருந்து முனையத்தை சுற்றிச்சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், பயணி தவறவிட்ட கைப்பையை கண்டெடுத்த அரசு பேருந்து டிரைவர் இளங்கோ மற்றும் கண்டக்டர் வரதராஜபெருமாள் ஆகியோர் போக்குவரத்து துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே, பெண் பயணி அழுது புலம்பியபடியே செல்வதை பார்த்த போக்குவரத்து துறை அலுவலர்கள், அவரிடம் விசாரித்த னர். அப்போது அவர், தனது கைப்பை தொலைந்துவிட்டதாக கூறியுள்ளார். பெண் பயணி தவறவிட்ட கைப்பை அவருக்கு சொந்த மானதா? என உறுதி செய்த பின்னர், அதிகாரிகள் கைபையை பெண்ணிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. கைப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த சம்பவம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெண் பயணி தவறவிட்ட ரூ.73 ஆயிரம் ஒப்படைப்பு: டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: