இதன்பிறகு, 2019ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மைசூரு வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அதிவிரைவு ரயில் கடந்த ஜன.3ம் தேதி முதல் சாதாரண விரைவு ரயிலாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ரயிலின் குறைந்தபட்ச சராசரி வேகமான 55 கி.மீ. வேகத்தை பராமரிக்கத் தவறியதால், இந்த ரயில் சாதாரண ரயிலாக மாற்றப்பட்டது. ரயில் பயணிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் பிற பிரதிநிதிகள் ஆகியோர் இந்த ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்க வேண்டும் எனக் கோரினர்.
இந்த கோரிக்கைக்கு ஏற்ப, கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டதால், இந்த ரயிலின் சராசரி வேகத்தை பராமரிக்க முடியாத ஏற்பட்டது. இதையடுத்து, சாதாரன ரயிலாக மாற்றப்பட்டது. இதனால், ரயில் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும். அதன்படி, சென்னை – மைசூரு இன்டர்சிட்டி விரைவு ரயில் கட்டணம் இரண்டாம் வகுப்பு இருக்கைக்கு ரூ.15ம், சேர்கார் வகுப்புக்கு ரூ.45ம் குறையும். இதுபோல, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் விரைவு ரயிலில் பயணிப்பவர்களுக்கான சீசன் டிக்கெட் கட்டணம் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதாவது மார்ச் 1ம் தேதியில் இருந்து கட்டண குறைப்பு நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை பழைய அதிவிரைவு ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, கட்டண குறைப்பு பற்றிய எந்த அறிவிப்பும் ரயில்வே வணிக மேலாளரிடம் இருந்து வரவில்லை என தெரிவித்தார். நொடிக்கு நொடி வரும் ஒடிபி காலத்தில், ரயில்வே துறையினர் அப்பாவி பொதுமக்களிடம் இந்த கட்டண கொள்ளையை வசூலிக்கிறது என்பது வருத்தமான விஷயமாகும். இந்த கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post சென்னை-மைசூரு இடையிலான ரயிலின் வேகம் குறைப்பு 3 மாதங்களாகியும் பழைய கட்டணத்தை வசூலித்து பயணிகளை ஏமாற்றும் ரயில்வே: நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.