இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் கடையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று ஆய்வு செய்த போது, அதிமுக நிர்வாகி மூர்த்தி மாமூல் கேட்டு தகராறில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைதொடர்ந்து ஐஸ்அவுஸ் போலீசார் அதிமுக 120வது வட்ட செயலாளர் மூர்த்தி (எ) ஐஸ்அவுஸ் மூர்த்தி மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த நிலையில் ஐஸ்ஹவுஸ் மூர்த்தியை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் திருவல்லிக்கேணி கிழக்கு பகுதி 120 தெற்கு வட்ட அதிமுக செயலாளர் ஐஸ்ஹவுஸ் மூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மாமூல் கேட்டு மிரட்டல் அதிமுக வட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை appeared first on Dinakaran.
