அந்தவகையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிறுவனம் மற்றும் நீலாங்கரையில் உள்ள கோகுலம் கோபாலனின் வீடு, கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் கொச்சியில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். விடிய விடிய நடந்த இந்த சோதனை நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.50 கோடி பணத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிமுறைகளை மீறி கோகுலம் நிதி நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே பலரிடம் சீட்டு பணம் வசூலிப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மற்றும் கோழிக்கோட்டில், அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில், கோகுலம் நிதி நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே வசிப்பவர்களிடம் இருந்து விதிமுறைகளை மீறி ரொக்கமாக ரூ.371.80 கோடியும், காசோலையாக ரூ.220.74 கோடியும் சீட்டு பணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், சோதனையில் கணக்கில் வராத ரூ.1.50 கோடி பணமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post எம்புரான் தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.