திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். கொங்கு மெயின் ரோடு, பெத்தி செட்டிபுரம், அறிவொளி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சிவகுமார் என்பவரது அட்டை நிறுவனத்தில் மழைநீர் புகுந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.