அதனால் வணிகர்கள் வணிக உரிமம் எடுப்பதில் காலதாமதம் ஆகியது, வணிக உரிமம் எடுக்க கடைசி நாளான 31-3-2025க்கு, பின்பு வணிக உரிமம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே முதலமைச்சரும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் உடனடியாக இதில் கவனம் செலுத்தி வணிக உரிமம் எடுப்பதற்கு ஒரு மாத காலம் நீட்டித்து தருமாறும், விவசாயிகள் உழைப்பால் விளைவித்து விற்பனைக்கு வரும் தர்பூசனி பழங்கள் குறித்து, உணவு பாதுகாப்பு துறையால் தவறான தகவல்கள் வெளியிட்டு, கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நம்நாட்டு விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் உதவிடுமாறு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
The post வணிக உரிமம் அபராதமின்றி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வருக்கு வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை appeared first on Dinakaran.