அந்த உத்தரவில், ஜனநாயகத்தில் ஆளும்கட்சி குறித்து விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, பேச்சுரிமை, கருத்துரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எந்த பேச்சையும் குற்ற வழக்கு மூலம் முடக்கக்கூடாது எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். சி.வி.சண்முகம் பயன்படுத்திய வார்த்தை வேண்டுமானால் ரசிக்கக் கூடிய வகையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது பேச்சை பொதுமக்கள் பார்வையில் இருந்து அணுக வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்ததே தவறு என்றும், முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.பி. என்ற முறையில் முதலமைச்சரை விமர்சிக்கும் போது சி.வி.சண்முகம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.பேச்சுரிமை இருந்தாலும் கூட முதலமைச்சர் குறித்தோ, அரசு குறித்தோ பேசும் போது வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசக்கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசும் போது வெறுப்பு பேச்சை தவிர்க்க வேண்டுமெனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
The post விமர்சனம் செய்ய உரிமை இருந்தாலும் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசக்கூடாது : அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஐகோர்ட் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.