தமிழ்நாடு பாஜக புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. புதிய மாநிலத் தலைவர் தேர்வான பிறகு, நிறைய பேசுவோம். பாஜகவில் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடுவதில்லை; இணைந்தே தேர்வு செய்வோம். அதிமுக நிர்பந்தத்தால் தமிழ்நாடு பாஜக தலைவர் மாற்றமா? என்ற கேள்விக்கு கருத்து கூற விரும்பவில்லை. தமிழ்நாட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்; டெல்லிக்கு செல்ல மாட்டேன். தமிழ்நாட்டின் புதிய பாஜக தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவருக்கான தேர்தல் விரைவில் நடக்கும். அதிமுக நிர்பந்தத்தால் நீங்கள் மாற்றமா என்ற கேள்விக்கு கருத்து கூற விரும்பவில்லை. என்னை பொருத்தவரை பாஜக நன்றாக இருக்க வேண்டும் என்றார்.
The post தமிழ்நாடு பாஜக புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.