×

தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்வாரியம் தகவல்

சென்னை: மின் வாரியம் வெளியிட்ட அறிக்கை:
மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 5ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர்கள் (Executive Engineer/O&M Office) அலுவலகங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பெறப்படும் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும். மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Electricity Board ,Chennai ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...