சென்னை விமானநிலையத்தில் இன்று லண்டன் விமானத்தில் இயந்திர கோளாறு: 220 பேர் உயிர் தப்பினர்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் லண்டனுக்கு செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்படத் தயார்நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் இன்று 206 பயணிகள், 14 விமான ஊழியர்கள் என மொத்தம் 220 பேர் பயணம் செய்ய இருந்தனர். விமானத்தில் பயணிகள் ஏறி அமர்வதற்கு முன், அவ்விமானத்தின் இயந்திர செயல்பாடுகளை விமானி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தார்.

பொறியாளர்கள், இயந்திரக் கோளாறுகளை சரிசெய்ய முயற்சித்தனர். எனினும், முடியவில்லை. இதைத் தொடர்ந்து, லண்டனுக்கு செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அதில் செல்ல வேண்டிய 206 பயணிகளும் சென்னை நகரில் உள்ள பல்வேறு சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

The post சென்னை விமானநிலையத்தில் இன்று லண்டன் விமானத்தில் இயந்திர கோளாறு: 220 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: