கடந்த 2023 மார்ச் மாதம் பேக்கரி தொழிலில் அதிக லாபம் ஈட்ட முடியாததால், தொழிலை மேம்படுத்த ரூ.15 லட்சம் கடனுக்காக எஸ்பிஐ வங்கியில் விண்ணப்பித்தார். சிபில் ஸ்கோர் சரியாக இல்லாததால் வங்கி ஊழியர்கள் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தனர். பின்னர் அவர் தனது உறவினரின் பெயரில் அதே எஸ்பிஐ நியாமதி கிளையில் மீண்டும் கடனுக்கு விண்ணப்பித்தார். அப்போதும் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. வெறுப்பு காரணமாக இந்த கொள்ளையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டார்.
யூடியூப் மற்றும் பல்வேறு ஓடிடி ஆன்லைன் தளங்களில் வங்கி கொள்ளை மற்றும் வங்கி திருட்டு தொடர்பான பல தொடர் வீடியோக்களை பார்த்ததாகவும் விஜயகுமார் கூறினார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் திருடிய தங்கத்தை ஒரு சிறிய லாக்கரில் தங்கத்தை நிரப்பி, தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கிணற்றில் மறைத்து வைத்து இருந்ததை போலீசிடம் தெரிவித்தனர்.
அந்த தகவல் அடிப்படையில் தமிழ்நாடு, மதுரைக்கு சென்ற கர்நாடக போலீசார், தமிழ்நாடு போலீசாரின் உதவியுடன் கிணற்றில் பதுக்கி வைத்திருந்த ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்தனர். அதை தாவணகெரே மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் டிஜிபி ரவிகாந்த்கவுடா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
The post கர்நாடக வங்கி கொள்ளை வழக்கில் மதுரையில் பதுக்கி வைக்கப்பட்ட 17 கிலோ தங்கநகை பறிமுதல்: 6 பேர் கைது appeared first on Dinakaran.