மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது; இடிபாடுகளில் சிக்கி 1670 பேர் காயம்!!

பாங்காக்: மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 704ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மணிப்பூர் எல்லையில் அமைந்துள்ள மியான்மர் நாட்டில் நேற்று பிற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்கள் சீட்டு கட்டுகளை போன்று சரிந்தன. வீடுகளிலும், தொழில் நிறுவனங்களில் இருந்தும் மக்கள் தப்பியோடினர். நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது மியான்மரில் அமைந்திருந்தாலும், அண்டை நாடான தாய்லாந்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

மியான்மரில் அடுத்தடுத்து 5 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மியான்மரில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிக்கு வந்தனர். நகரப் பகுதியில் வசித்த மக்கள் பெரும் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் முதற்கட்டமாக 25 பேர் உயிரிழந்தனர். 43 பேர் மாயம் அடைந்தனர். மியான்மரில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில்இரண்டாவது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. மேலும் காயமடைந்தோர் எண்ணிக்கை 1,670 பேர் காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பலி எண்ணிக்கையும், காயங்களின் எண்ணிக்கையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மியான்மர் ராணுவம் தலைமையிலான அரசின் மூத்த ஜெனரல் மின் ஆங் லாயிங் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ஆயிரம் படுக்கைகளுடன் சிகிச்சையளிக்க மருத்துவமனையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, அவசரகால சிகிச்சை துறையும் தயாரான நிலையில் வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் நடந்து வருகின்றன.

இதனிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்கு இக்கட்டான சூழலில் இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்த நிலையில், தொடர்ச்சியான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து இந்தியா மியான்மருக்கு 15 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்களை அனுப்ப உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் கூடாரங்கள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், உடனடியாக உண்ணக்கூடிய உணவு, தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சுகாதாரப் பொருட்கள், சூரிய விளக்குகள், ஜெனரேட்டர் கருவிகள் மற்றும் பாராசிட்டமால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், சிரிஞ்ச்கள், கையுறைகள் மற்றும் கட்டுத் துணிகள் போன்ற அத்தியாவசிய மருந்துகள் அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது; இடிபாடுகளில் சிக்கி 1670 பேர் காயம்!! appeared first on Dinakaran.

Related Stories: