சென்ற ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பாரா ஒலிம்பிக்ஸ் ஆகஸ்டு மாதம் 2024-ல் நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ரூ.7 லட்சம் வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருந்து இந்த பாரா ஒலிம்பிக்ஸ்-ல் பங்கேற்ற, 4 மாற்றுத் திறனாளி வீரர்கள் முதல் முறையாக பதக்கம் வென்றனர். பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சிவன் மற்றும் தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு ஆகியோருக்கு மொத்தம் ரூ.5 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு, 3 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 104 வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தெற்காசியாவிலேயே முதன்முறையாக நைட் ஸ் ரீட் சர்க்கியூட் கார் பந்தயம் சென்னையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. யார் யாரெல்லாம் இந்த போட்டியை விமர்சித்தார்களோ, அவர்களே பாராட்டுகிற அளவுக்கு கார் பந்தயத்தை சிறப்பாக நடத்திக் காட்டினோம். ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு இதுவரை ரூ.28 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் விளையாட்டு வீரர்களின் தேவை அடிப்படையில், ரூ.16 கோடியே 56 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. வடசென்னையை சேர்ந்த கேரம் வீராங்கனை காசிமாவுக்கு அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்கின்ற வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், அவருக்கு, அதற்கான நிதி உதவி இல்லை என தெரிந்து அடுத்த நாளே, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கி, அவரை உலகக் கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா அனுப்பினோம்.
நிதி பெற்றுச் சென்ற தங்கை காசிமா, உலகக் கோப்பையை வென்று தமிழ்நாடு திரும்பினார். உடனடியாக அவரை பாராட்டி, ரூ.1 கோடியை முதல்வர் வழங்கினார். இதுபோல சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய தொகுதிகளில், விளையாட்டு வீரர்கள் யாருக்காவது போட்டிகளில் பங்கேற்க நிதி உதவி தேவைப்பட்டால், அவர்களை, www.tnchampions.sdat.in என்ற இணையதளத்தில் தயவுசெய்து விண்ணப்பிக்க சொல்லுங்கள். நிச்சயம் அவர்களின் திறமைக்கு ஏற்ப நிதி உதவி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* மகளிர் உரிமைத்தொகை பெற விரைவில் விண்ணப்பிக்கலாம்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம், கடந்த 19 மாதங்களில் மட்டும், ரூ.21,657 கோடி உரிமைத் தொகையாக மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘இதுவரை உரிமைத்தொகை பெற்றிடாத தகுதி வாய்ந்த மகளிர், புதிதாக விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும்.
The post உங்க தொகுதி விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால் விண்ணப்பிக்க சொல்லுங்க…எம்எல்ஏக்களுக்கு துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள் appeared first on Dinakaran.