கொடநாடு வழக்கில் எடப்பாடி, இளவரசியிடம் விசாரணை: சிபிசிஐடி போலீசார் முடிவு

கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட 316 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறியதாவது: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி விட்டனர்.

மற்றவர்களுக்கு சம்மன் அனுப்பட்டு வருகிறது. சுதாகர் நேற்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 38 கேள்விகள் கேட்கப்பட்டது. இதுவரை 18 பேரில் 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இளவரசியிடம் விசாரணைக்கு சம்மன் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும். அதேபோல கொடநாடு போலீஸ்காரர் கனகராஜ் சேலம் விபத்தில் உயிரிழந்த கனகராஜூக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பியதாகவும், அதன் பின்னரே அவர் உயிரிழந்ததாக விசாரணைக்கு வந்த சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

The post கொடநாடு வழக்கில் எடப்பாடி, இளவரசியிடம் விசாரணை: சிபிசிஐடி போலீசார் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: