ஊஞ்சலூர் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்


மொடக்குறிச்சி: ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த ஊஞ்சலூரில் மாரியம்மன் மற்றும் செல்லாண்டி அம்மன் கோயில்கள் உள்ளது. இக்கோயில்கள் பொங்கல் திருவிழா, பூக்குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 11ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மாரியம்மன் கோவில் முன்பாக கம்பம் நடப்பட்டது . கம்பத்திற்கு பக்தர்கள் தினசரி மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், திருவீதி உலா ஆகியவை நடைபெற்றது.

இதை தொடர்ந்து கோயில் முன்பாக அமைந்துள்ள 60 அடி பூக்குண்டத்தில் காப்புக் கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக அம்மன் தேரில் எழுந்தருளினார். இதை தொடந்து தோரோட்டம் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஊஞ்சலூர் கோயில் வீதி, கொடுமுடி ரோடு வழியாக மீண்டும் மாரியம்மன் கோயில் திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு நிலை அடைந்தது. இன்று அம்மன் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பொங்கல் விழாவுடன் நிறைவு பெற்றது.

The post ஊஞ்சலூர் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: