பட்ஜெட்டை ‘ரூ’ போட்டு அனைவரையும் அலறச் செய்தவர் முதலமைச்சர்: மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு

சென்னை: பட்ஜெட்டை ‘ரூ’ போட்டு அனைவரையும் அலறச் செய்தவர் முதலமைச்சர் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு துணை முதல்வர் பதிலுரை ஆற்றி வருகிறார். அதில்,நான் பதில் சொல்லும்போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருப்பதில்லை. டெல்லியில் 3 கார்கள் மாறி அதிமுக அலுவலகத்துக்கு சென்றதாக கூறுகிறார்கள் எடப்பாடிக்கு வாழ்த்துகள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ரூ’ போட்டு தமிழ்நாடு பட்ஜெட் தொடங்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டை ‘ரூ’ போட்டு அனைவரையும் அலறச் செய்தவர் முதலமைச்சர்.

மகளிர் சுயஉதவி குழுவினருக்கும் அடையாள அட்டை

விரைவில் அனைத்து மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.

சென்னை F4 கார் பந்தயம் சிறப்பாக நடத்தப்பட்டது

சென்னை F4 கார் பந்தயத்திற்கு எத்தனையோ எதிர்ப்புகள் வந்தன.. ஆனால், எதிர்த்தவர்களே பாராட்டும் அளவுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது”

உரிமைத் தொகை-விரைவில் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம்

மகளிர் உரிமைத் தொகை கோரி விரைவில் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 19 மாதங்களில் ரூ.21,000 கோடி உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 1.15 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தில் 2.56 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.4 கோடி உயர் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம்

நிலம் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும். 22 சட்டப்பேரவை தொகுதிகளில் மினி ஸ்டேடியம் கட்டும் பணி விரைவில் தொடங்கும். ராதாபுரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.

வீரர்கள் திறமைக்கேற்ப உதவித்தொகை வழங்கப்படும்”

விளையாட்டு வீரர்கள் திறமைக்கேற்ப நிச்சயம் உதவித்தொகை வழங்கப்படும். 6 மாவட்டங்களில் பாரா விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் இன்னும் 3 மாதங்களில் நிறைவு பெறும்.

ரூ.1000 கோடியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

120 வட்டாரங்களில் ரூ.1000 கோடியில் வாழ்ந்து காட்டுவோம் 3.0 திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.66 கோடியில் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

5 மண்டலங்களில் உணவுத் திருவிழா

5 மண்டலங்களில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் உணவுத் திருவிழா நடத்தப்படும்.

24 நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டி

சென்னை, மதுரையில் 24 நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டி நடைபெறும். ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி ரூ.56 கோடியில் நடத்தப்படும். ரூ.19 கோடியில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு மையம் அமைக்கப்படும். ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை 2025 போட்டிகள் சென்னை மற்றும் மதுரையில் நடத்தப்படும்.

25,000 விளையாட்டு வீரர்களுக்கு காப்பீட்டு திட்டம்

25,000 விளையாட்டு வீரர்களுக்கு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

சென்னையில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் விடுதி

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு விடுதி சென்னையில் அமைக்கப்படும். இன்னும் நூறு காசிமாக்கள் உருவாக அரசு துணை நிற்கும்.

40 தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம்

ரூ.120 கோடியில் 40 தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும். திராவிட மாடல் அரசின் திட்டங்களால் குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவராவது பயன்பெற்று வருகிறார்கள்.

ஜனநாயகத்தை காக்கும் களத்தில் நிற்கிறார் முதல்வர்”

இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கும் களத்தில் நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

The post பட்ஜெட்டை ‘ரூ’ போட்டு அனைவரையும் அலறச் செய்தவர் முதலமைச்சர்: மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: