அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு

சென்னை: அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு அளித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது அவைக்குறிப்பில் ஏறாது. கூச்சல் குழப்பம் ஏற்படும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் நடந்துகொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இன்று நாள் முழுவதும் அவையில் கலந்து கொள்ள முடியாது என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னறிவிப்பு இல்லாமல் பேச அனுமதி கோரிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அமளியில் ஈடுப்பட்டார். மரபின்படி அறிவிப்பே கொடுக்காமல் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என சபாநாயகர் பதில் அளித்தார். பேச அனுமதி அளிக்காததால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுப்பட்டனர்

முன் அனுமதி பெற்றே பேச வேண்டும் என கடந்த ஆட்சியில் சபாநாயகர் தனபால் கூறியதே, இப்போதும் கடைபிடிக்கப்படுகிறது என அமைச்சர் எ.வ.வேலு பதில் அஅளித்தார். ”நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். தயாராக உள்ளேன். டிவியை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனக் கூற மாட்டேன். ஆனால், மரபை பின்பற்றுங்கள்” என முதலமைச்சர் பதில் அளித்தார்

தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு அளித்தார். சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்தார். அவையில் இருந்து அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டபின் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

The post அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: