இதையடுத்து தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்கள் முழுவதும் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். எண்ணெய் நிறுவனங்களின் புதிய விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டும் லாரி உரிமையாளர்கள் புதிய ஒப்பந்த விதிகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. நான்காயிரத்துக்கு அதிகமான எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள், லாரி ஓட்டுனர்கள் இடையே இன்று மாலை கோவையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
The post தென்மாநில எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: 6 தென் மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! appeared first on Dinakaran.