கால புருஷனுக்கு பதினாறாவது (16) வரக்கூடிய நட்சத்திரம் விசாகம் நட்சத்திரமாகும். விசாகம் ஒரு உடைபட்ட நட்சத்திரம். இதன் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும் கடைசி ஒரு பாதம் விருச்சகத்தில் உள்ளது. விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரப் புள்ளிகளின் கூட்டு வடிவமாகும். சிவனின் நெற்றிக் கண்ணின் தீப்பொறிகள் சிதறி ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு ஆறுமுகம் கொண்ட தமிழ்க் கடவுளான முருகப் பெருமான் அவதரித்த நட்சத்திரம் என்ற சிறப்ைப பெற்றுள்ளது. சமஸ்கிருதத்தில் விசாகம் கிளைகளைக் கொண்ட வடிவம் என்ற பொருளை தருகிறது. விசாகம் நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் வைகாசி, முற்றில், சுளகு, முறம் ஆகியவை ஆகும்.
இந்த நட்சத்திரம்தான் விசாகன், விஷால் போன்ற பெயர்களை கொடுக்கிறது. விசாகன் என்ற சொல்லானது முருகனையே குறிப்பிடுகிறது. வி என்ற சொல் மயிலையும் சாகன் என்ற சொல் பயணத்தையும் குறிப்பிடுகிறது. அவ்வாறே, விசாகம் என்பது மயில் மீது பயணம் செய்பவன் என்ற பொருளை கொடுக்கிறது. விசாக நட்சத்திரத்தில்தான் சந்திரன் நீசமடைகிறான். ஆகவே, இந்த நட்சத்திரத்தில் நெல் நாற்று நடுதல், விதை விதைத்தல் மற்றும் சந்திரன் தொடர்பான பயிர்களை நடுவது கூடாது. அதேபோல், கிணறுகளை சுத்தம் செய்வது கிணறு வெட்டுவது ஆகியவைகளை செய்தல் பயன் கிட்டாது. விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி வியாழன். இந்த வியாழனுக்கும் அதன் விசாகத்தின் விருட்சத்திருக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு. வியாழன் காரகத்திற்குரிய விலங்கு யானை. யானை விரும்பி உண்ணும் பழம் விளாம்பழம். ஆம், விளாம் பழத்தினை அப்படியே விழுங்கிவிடும். ஆனால், சாணத்தில் முழு பழம் அப்படியே வெளிவந்துவிழும். ஆனால், பழத்தின் உள்ளே எதுவும் இருக்காது. பழத்தின் துவாரங்கள் வழியாக யானையின் வயிற்றி உள்ளே உள்ள அனைத்தையும் ஈர்த்துக் கொள்கிறது என்பது ஆச்சர்யம்தான்.
விசாக நட்சத்திரத்தில் அவதரித்த முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்து தேவர்களை காக்கின்றான். இந்த சூரபத்மன் யாரே என எண்ண வேண்டாம். இந்த சூரபத்மன் என்பவன் முற்பிறவியில் பார்வதி தேவியின் தந்தையாக இருந்த தட்சன்தான்.சிவபெருமானை எதிர்த்து அவமதித்து வேள்வி செய்து உயீர்நீத்தான் தட்சன். மறுபிறப்பு எடுக்கிறான். அதிலும் அவனுடைய அசுர குணங்கள் அவனை தொடர்கின்றன. மறுபிறவியில் பத்மாசூரன் மற்றும் சூரபத்மன் என்ற பெயரில் அவதாரம் செய்கிறான். தாத்தா என்பதால் முருகன் சூரபத்மனை கொல்லாமல் மயிலாகவும் சேவலாகவும் மாற்றி வைத்துக் கொள்கிறார். அதுவே முருகனுக்கு வெற்றிச் சின்னமாக அமைகிறது.இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் குருவாகவும் மற்றவர்களுக்கு ஞான உபதேசம் செய்பவர்களாகவும் இருந்துள்ளனர். காரணம் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு வியாழன் அதிபதி. முருகப் பெருமான் தன் தந்ைதக்கு ஓம் என்ற பிரணவத்தை வழங்கி ஞான உபதேசம் செய்தார். அது போலவே, வள்ளலார், புத்தர் ஆகியோர் மக்களுக்கு ஞான உபதேசம் செய்துள்ளனர்.
பொதுப் பலன்கள்
இந்த நட்சத்திரம் உடைபட்டு இரண்டு ராசிகளை கொண்டதால் துலாத்தில் உள்ள சுக்ரனின் அமைப்பையும் விசாகத்தில் உள்ள செவ்வாயின் அமைப்பையும் பெற்றவர்களாக இருப்பர். நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். வேகமாக சில காரியங்களைச் செய்துவிட்டு வருத்தப்படுவர். குழந்தைகளை அதிகம் நேசிப்பவர்களாக இருப்பர். எந்த மதத்ைத சேர்ந்தவராக இருந்தாலும் ஆன்மிக ஈடுபாடு அதிகம் இருக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் எளிதாக உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள். அதற்காக கடுமையாக உழைப்பீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை.
ஆரோக்கியம்
உங்கள் குழந்தைகள் சுகவீனம் அடையும் பொழுது நீங்கள் மிகவும் வருத்தத்துடன் இருப்பீர்கள். குழந்தை மனம் என்றால் நீங்கள்தான். மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும், உங்களின் மனம் பாதிக்கப்படும் பொழுது நீங்கள் நோயுற்றது போன்ற உணர்வு உங்களுக்கு உண்டாகும். சமூகத்தில் சில வருத்தமான நிகழ்வுகளையும் பிரிவுகளையும் உங்களால் தாங்கிக் கொள்ள இயலாது.யோகா, தியானம் போன்றவற்றின் மூலம் நீங்கள் மனதை சரியான நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
விசாகத்திற்குரிய வேதை நட்சத்திரம்
வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். கார்த்திகை என்பது வேதை நட்சத்திரமாக உள்ளது. இந்த நட்சத்திர நாளில் புதிய காரியங்களை தொடங்குவது புதிய சிந்தனைகளை விரிவாக்கம் செய்வது வேண்டாம்.
பரிகாரம்
உங்களுக்குரிய ஜென்ம நட்சத்திர நாளில் விளா மரங்களை ( சந்திரன் துலாத்தில் இருக்கும் பொழுது) நடவு செய்யுங்கள். விசாகம் – விருச்சிகமாக வந்தால் ஜென்ம நட்சத்திரத்திற்கு அடுத்த நாளான அனுஷத்தில் நடவு செய்யுங்கள்.ஒரு முறையாவது ஜென்ம நட்சத்திர நாளில் திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவரை வழிபட்டு வாருங்கள்.
The post விசாகம் : நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்… appeared first on Dinakaran.