பல்லாவரம் தொகுதியில் மழைகாலங்களில் மரக்கிளைகள் விழுந்து மின் கம்பிகள் பாதிக்கப்பட்டு மின்தடை ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் 4 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைவடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி எப்போது முடிக்கப்படும். எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: பல்லாவரம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகிறார். கடிதமும் வழங்கி இருக்கிறார். இந்த பணியை விரைந்து முடிக்கவேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் வரும் 30.6.2025க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.
The post பல்லாவரம் தொகுதியில் மின் புதைவடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்: சட்டமன்றத்தில் எம்எல்ஏ இ.கருணாநிதி கேள்வி appeared first on Dinakaran.
