கொடைக்கானல், மார்ச் 27: கொடைக்கானலை சேர்ந்தவர் சிவராஜ் (60). சொந்தமாக காட்டேஜ் நடத்தி வந்தார். இவர் கடந்த மார்ச் 20ம் தேதி எரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மதுரை தத்தனேரியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் போலீசில் சரணடைந்தார். கொடைக்கானல் போலீசார் இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற 4 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் இவ்வழக்கில் தொடர்புடைய சிவகங்கையை சேர்ந்த சந்தோஷ் என்பவரை நேற்று கைது செய்து உள்ளனர். இவர்கள் கொடுக்கும் தகவலின் பேரில் மற்ற 3 பேரை தேடி வருகின்றனர். அனைவரையும் கைது செய்த பின்புதான் இவ்வழக்கில் உண்மையான தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.
The post கொடைக்கானல் காட்டேஜ் ஓனர் ெகாலையில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.
