கார் மோதி மூதாட்டி சாவு

தேனி, ஜன. 3: பெரியகுளம் நகர் வடகரையில் உள்ள வைத்தியநாதபுரத்தில் பகவதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமாயி அம்மாள்(79). இவருக்கு இருகால்களும் ஊனமான நிலையில், தவழ்ந்தபடியே வெளியே சென்று வருவது வழக்கம். இவர் இவரது மகனான முத்தையாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் காலை மூதாட்டி வைத்தியநாதபுரத்தில் இருந்து தவழ்ந்தபடியே புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் சென்றார். அப்போது பெரியகுளம் அருகே எண்டபுளி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் தமிழ்செல்வன் ஓட்டி வந்த கார் அஜாக்கிரதையாக சாலையில் தவழ்ந்து சென்ற மூதாட்டி மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையா அளித்த புகாரின்பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Related Stories: