அரூர், மார்ச் 27: அரூர் பகுதிகளில் மண் அடுப்பு தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, காரிமங்கலம், அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பானைகள் தயாரிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். அரூர் அடுத்த கொங்கவேம்பு பகுதியில், சில குடும்பத்தினர் பரம்பரையாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பெரிய அளவிலான மண்பானைகள், பானைகள், அடுப்பு, பூந்தொட்டிகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நவீன காலத்தில் எலக்ட்ரிக் அடுப்பு, எரிவாயு அடுப்பு ஆகியவற்றை பயன்படுத்தி வந்தாலும், தற்போதும் கிராம புறங்கள் மட்டுமின்றி நகர் புறங்களிலும் மண் அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
அடுப்பு ஒன்றின் விலை ₹130 முதல் ₹150 வரை விற்பனை செய்யப்படுகிறது. என்னதான் நவீன வசதிகள் பெருகி வந்தாலும், மண் அடுப்பிற்கு தற்போதும் மவுசு அதிகம் உள்ளது. தொடக்கத்தில் கிராமப்புறங்களில், பயன்பாட்டில் இருந்து வந்த அடுப்புகள், தற்போது வரை நகர்புறங்களில் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
The post அரூரில் மண் அடுப்பு தயாரிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.
