அலங்கரித்த சப்பரத்தில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா: சுற்றுவட்டார கிராமங்களில் தொடங்கியது


சத்தியமங்கலம்: அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா சுற்றுவட்டார கிராமங்களில் இன்று தொடங்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி மாத குண்டம் திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைதொடர்ந்து நேற்று இரவு கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன் எழுந்தருளினார். கோயிலில் இருந்து புறப்பட்ட அம்மன் சப்பரம் சிக்கரசம்பாளையம் வந்தடைந்தது. இன்று சிக்கரசம்பாளையம் பகுதியில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

இன்று தொடங்கிய அம்மன் திருவீதி உலா வருகிற 1ம் தேதிவரை இக்கரை நெகமம் புதூர், வெள்ளியம்பாளையம், தொட்டம்பாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் நடக்கிறது. 1ம் தேதி (செவ்வாய்) அம்மன் சப்பரம் சத்தியமங்கலத்தில் திருவீதி உலா நடக்கிறது. இதைத்தொடர்ந்து பாலமுருகன் கோயில் வழியாக பட்டவர்த்தி அய்யம்பாளையம் மாரியம்மன் கோயிலுக்கு எழுந்தருளுகிறார். பின்னர் புதுவடவள்ளி, புதுக்குய்யனூர், பசுவபாளையம், புதுப்பீர்கடவு, பட்டரமங்கலம், ராஜன்நகர் வழியாக, இரவு பண்ணாரி அம்மன் கோயிலை வந்தடைகிறது.

The post அலங்கரித்த சப்பரத்தில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா: சுற்றுவட்டார கிராமங்களில் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: