சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம், 2019 பிப்ரவரி 10 அன்று AG-DMS முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான நீல வழித்தடத்தின் சுரங்கப் பாதை திறக்கப்பட்டு முழுமையாக செயல்படத் தொடங்கியது. மெட்ரோ ரயில் திட்டம் என்பது நகரங்களில் வாகன நெரிசலை குறைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. இதன் சேவை பெரிய பெரிய நகரங்களில் மட்டுமே இருக்கும். லண்டனில் முதன்முதலாக கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும் மின்சாரம் மூலம் ரயிலை இயக்கவும் திட்டமிட்டு இந்த ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அமெரிக்கா, ஜப்பான், சீனா என வளர்ந்த நாடுகளுக்கு இந்த திட்டம் விரிவடைய தொடங்கியது.
இந்தியாவின் நான்காவது நீளமான மெட்ரோ நெட்வொர்க்கான சென்னை மெட்ரோ இரண்டு கட்டங்களுடன் தொடங்கியது. முதல் கட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது, இரண்டாவது கட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. மூன்று வழித்தடங்களில் 42 நிலையங்களை உள்ளடக்கிய, மெட்ரோ ரயில் இணைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட் சந்தையை புதுப்பிக்கும் நோக்கமும் கொண்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஏற்கனவே 2 வழித்தடங்களில் ரயில்கள் இயங்கி வருகின்றன. இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றன. தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய வழித்தடம் அமைக்க முடிவு செய்துள்ளது. கலங்கரை விளக்கம் முதல் உயர் நீதிமன்றம் வரை புதிய வழித்தடத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியுள்ளது
The post சென்னையில் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் appeared first on Dinakaran.