நாக்பூர்: பாலிவுட் நடிகர் சோனுசூட்டின் மனைவி சோனாலி சூட், சோனாலியின் தங்கை மற்றும் தங்கை மகன் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காரில் நாக்பூர் சென்று கொண்டிருந்தனர். காரை தங்கை மகன் ஓட்டியுள்ளார். மும்பை – நாக்பூர் நெடுஞ்சாலையில் நாக்பூர் அருகே செல்லும்போது, அந்த வழியாக வந்த டிரக் மீது கார் பயங்கர வேகத்தில் மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது. காரில் இருந்த சோனாலிக்கும், தங்கை மகனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சோனாலியின் தங்கை சிறு காயங்களுடன் தப்பினார். தனியார் மருத்துவமனை ஒன்றில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
The post பிரபல பாலிவுட் நடிகர் சோனுசூட் மனைவி கார் விபத்தில் படுகாயம் appeared first on Dinakaran.