தேவகோட்டை, மார்ச் 26: தேவகோட்டையில் நேற்று முன்தினம் முதியவர் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து இறந்தார். இவரது முழுவிபரம் தெரியாமல் போலீசார் விசாரித்து வந்தனர். நேற்று முதியவரை அவரது உறவினர்கள் தேடிவந்து அடையாளம் காண்பித்து உறுதி படுத்தினர். அதன்படி, காரைக்குடி வள்ளலார் தெருவை சேர்ந்த செல்லத்துரை (60). இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில். தற்சமயம் காரைக்குடி வள்ளலார் தெருவில் வசித்து வந்தார்ர். நேற்று முன்தினம் வீட்டை விட்டு கிளம்பி வேலைக்கு சென்றவர் தேவகோட்டையில் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து இறந்தார் என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
The post வெயிலின் கொடுமையால் இறந்த முதியவர் உடல் ஒப்படைப்பு appeared first on Dinakaran.
