திருவாரூரில் புதிய பேருந்து வழித்தடம்

 

திருவாரூர், மார்ச் 25: திருவாரூரில் இருந்து புதிய பேருந்து வழிதடத்தினை கலெக்டர் மோகனச்சந்திரன் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தனர். திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்தில் பேருந்துகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமை வகித்தார். எம்எல்ஏ பூண்டி கலைவாணன் முன்னிலை வகித்தார். இதில் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும் மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் வழியாக மதுரைக்கும் என 2 புதிய வழித்தடத்தில் 2 பேருந்துகளை கலெக்டர் மோகனச்சந்திரன் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தனர்.

மேலும் திருவாரூரிலிருந்து எட்டுக்குடி மற்றும் திட்டச்சேரி ஆகிய 2 வழித்தடங்களில் சென்ற புறநகர் பேருந்துகளை நகர பேருந்துகளாக மாற்றம் செய்தும் துவக்கிவைத்தனர். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ சௌமியா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நாகை மண்டல பொது மேலாளர் ராஜா, கிளை மேலாளர் நடராஜன், நகராட்சி பணி நியமனக்குழு உறுப்பினர் பிரகாஷ், கவுன்சிலர்கள் செந்தில், சங்கர்,சின்ன வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூரில் புதிய பேருந்து வழித்தடம் appeared first on Dinakaran.

Related Stories: