உடன்குடி, மார்ச் 25: உடன்குடி ஒன்றிய பாஜ புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சங்கரகுமார் ஐயன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி கலந்து கொண்டு, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள செய்ய வேண்டிய பணிகள், பாஜ அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது, ஒன்றிய அரசின் மக்கள் நலத் திட்டங்களால் பயன் பெற்றவர்களை சந்திப்பது குறித்து பேசினார். புதிய ஒன்றிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பசுபதி சிவசிங், ஒன்றிய துணை தலைவர்கள் பொன்செல்வி, விஜயமுருகன், செந்தில்முருகன், குமாரவேல், ஒன்றிய செயலாளர்கள் ஜெயந்தி, நடராஜா, பேச்சிமணி, பிரசாந்த், ராஜ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெயக்குமார், மகளிரணி செயலாளர் வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post உடன்குடியில் பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.
