கல்வியை ஆர்எஸ்எஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்தால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல்காந்தி விமர்சனம்

புதுடெல்லி: கல்வி முறையை ஆர்எஸ்எஸ் தனது முழுக்கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டால் இந்தியா அழிந்துவிடும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் ஜந்தர்மந்தரில் மாணவர்கள் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘‘ஒரு அமைப்பானது நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகின்றது.

அந்த அமைப்பின் பெயர் ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்கம். கல்வி முறை அவர்களின் கைகளுக்கு சென்றால் உண்மையில் மெதுவாக இந்த நாடு அழிக்கப்படும். யாருக்கும் வேலை கிடைக்காது. நாடு முழுவதுமாக அழிந்துவிடும். இந்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஆர்எஸ்எஸ் ஆதிக்கத்தில் உள்ளனர் என்பதை மாணவர் அமைப்புக்கள் மாணவர்களுக்கு சொல்ல வேண்டும். வரும் காலத்தில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஆர்எஸ்எஸ் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படக்கூடும். இதனை நாம் நிறுத்த வேண்டும்” என்றார்.

The post கல்வியை ஆர்எஸ்எஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்தால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல்காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: