கேரளா: முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. பேபி அணையை வலுப்படுத்த 15 மரங்களை அகற்ற வேண்டிய சூழலில் கேரள அரசு ஒத்துழைக்கவில்லை எனவும் குற்றசாட்டு வைக்கப்பட்டது.