சுமார் 1000 ஹெக்டேர் பரப்பளவு உள்ள பாலவாடி கரடு பகுதியில், சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதால், மாலை நேரங்களில் கிராம மக்கள் வெளியே வருவதில்லை.
இரவு நேரங்களில் வீட்டிற்கு உள்ளே உறங்க வேண்டும் என்று கிராம மக்களுக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். மேட்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராம மக்கள் இரவில் பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்டியதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கிராமத்தின் உள்ளே சிறுத்தை நுழையாத வண்ணம் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். டிரேன் கேமரா மூலம் கண்காணித்து சிறுத்தை இருக்கும் இடம் உறுதிசெய்த பிறகு, அதனை பிடிக்க கூண்டு வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post மேட்டூர் அருகே சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் appeared first on Dinakaran.