மும்பை: கடந்த வாரத்தில் பங்குகள் விலை உயர்ந்ததால் 9 பெரிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3,06,243.74 கோடி அதிகரித்துள்ளது. பார்த்தி ஏர்டெல் பங்கு விலை கடந்தவாரம் அதிகரித்ததால் சந்தை மதிப்பு ரூ.53,286 கோடி உயர்ந்து ரூ.9,84,354,.44 கோடியானது. ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.64,426 கோடி அதிகரித்து ரூ.9,47,628,46 கோடியாக உயர்ந்தது.