இத்திட்டத்தின் படி 25,000 புதிய வீடுகள் 2025-26 நிதியாண்டில் ரூ.600 கோடியில் கட்டப்படும் என அறிவித்தார். இந்நிலையில் முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம் இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு மறுசீரமைக்க முடியாத வீடுகள் ஒரு வீடு 210 சதுரடியில் ரூ.2.40 லட்சத்தில் மறுகட்டுமானம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 90 நாட்களில் கட்டவும், முதற்கட்டமாக 25,000 வீடுகள் ரூ.600 கோடியில் மறுக்கட்டுமானம் செய்ய முன்மொழியப்பட்டது.
இதையடுத்து முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஒப்பபுதல் அளிக்கவும், ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஊரக வளர்ச்சி ஆணையர் கோரிக்கை வைத்தார். இதனை கவனமாக பரிசீலித்த அரசு மறுசீரமைக்க முடியாத வீடுகளை புதிதாக கட்டித்தர முதலமைச்சர் வீடுகள் மறுகட்டுமான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியும், ரூ.100 கோடி மாநில அரசின் நிதி மற்றும் திட்டத்திற்கான நிதி ரூ.500 கோடி என மொத்தம் ரூ.600 வழங்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
The post முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் 25,000 வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு: அரசு ஆணை appeared first on Dinakaran.