×

கற்பக விநாயகா கல்லூரியில் 2 நாள் தேசிய கருத்தரங்கம்

மதுராந்தகம்: கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கத்திலுள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் பங்களிப்போடு இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பத்துறை சார்பாக நடைபெற்றது. இதில், கல்லூரி இயக்குநர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் காசிநாதபாண்டியன், புலம்முதல்வர்கள் சிவகுமார், தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு இந்திய தொழில் சுகாதார சங்கத்தின் முன்னாள் தலைவர் நாகராஜ், தொழில் ஆரோக்கியத்தை நிர்வகித்தல் பங்குதாரர் ஜெயராஜ், சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவ ஆலோசகர் சாரங்கதரன், திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய மாதிரி கிராமப்புற சுகாதார ஆராய்ச்சி பிரிவு மருத்துவர் முத்து ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து .விழா மலரை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகள் இடையே சிறப்புரையாற்றினர்.மேலும், இந்தியா முழுவதிலுருந்தும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனது ஆராய்ச்சி கட்டுரைகளை பகிர்ந்து கொண்டனர். பங்குப்பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

The post கற்பக விநாயகா கல்லூரியில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : 2-day National Seminar ,Karpaka Vinayaka College ,Madhurantakam ,National ,Karpaka Vinayaka College of Engineering and ,Technology ,National Seminar ,Karpaka Vinayaka College of Engineering and Technology ,Chinnakolambakkam ,Tamil Nadu State Science and Technology Council… ,-day National Seminar ,Dinakaran ,
× RELATED மதுராந்தகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி