கோயில் திருவிழாக்களின் அழைப்பிதழில் வெவ்வேறு சாதி, சமூகங்களின் பெயர்களை அச்சிடுவதைத் தவிர்க்க வேண்டும்: ஆணையர் உத்தரவு

சென்னை: இந்து அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களின் போது சாதி மற்றும் சமூகங்களின் பெயர்களை குறிப்பிட்டு அழைப்பிதழ் அடிக்க தடைவிதித்தும், அழைப்பிதழில் சாதி பெயரை குறிப்பிடாமல் அனைவரும் நிதியுதவி வழங்குகின்றனர் என குறிப்பிட வேண்டும் எனவும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகர் மற்றும் வட்டம். அருள்மிகு நாடியம்மன் திருக்கோயிலின் திருவிழா அழைப்பிதழில் “ஊரார்” என்பதற்கு பதில் “ஆதி திராவிடர்” என்ற பெயரை பயன்படுத்த அனுமதி வழங்குதல் தொடர்பாக தொடரப்பட்ட நீதிப்பேராணை வழக்கில் பார்வையில் காணும் உத்திரவின் மூலம் கீழ்காணும் நெறிமுறைகளுடன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

A. கோயில் திருவிழாக்கள் இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக கொண்டாடப்பட வேண்டும்.

B. வரும் ஆண்டுகளில் பல்வேறு விழா நிகழ்வுகளின் விவரங்களை உள்ளடக்கிய அழைப்பிதழைத் தயாரிக்கும் சமயத்தில், அழைப்பிதழில் வெவ்வேறு சாதி மற்றும் சமூகங்களின் பெயர்களை அச்சிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

C. தேவைப்பட்டால், கோயில் நிர்வாகம் நன்கொடையாளர்களுக்கு அவர்களின் பங்களிப்புகளைப் பாராட்டி தனிப்பட்ட ஒப்புதல்களை அனுப்பலாம்.

The post கோயில் திருவிழாக்களின் அழைப்பிதழில் வெவ்வேறு சாதி, சமூகங்களின் பெயர்களை அச்சிடுவதைத் தவிர்க்க வேண்டும்: ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: