ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் அந்நிய நாட்டு களைச்செடிகளை அகற்றி வரும் மலைவாழ் மக்கள்: வனத்துறையினருடன் இணைந்து பணி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வளர்ந்துள்ள அந்நிய நாட்டு களைச் செடிகளை அகற்றும் பணியில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வளர்ந்துள்ள அந்நிய நாட்டு களைச்செடிகளை அந்தந்த பகுதி வனத்துறையினர் அழித்து வருகின்றனர். இந்த பணியில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வனப் பகுதியை பொருத்தவரை சுமார் 520 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள், அரிய வகை தாவரங்கள், மூலிகைச் செடிகள், பல நூற்றாண்டை கடந்த வானளவு ஓங்கி நிற்கும் மரங்கள் என எண்ணற்றவை உள்ளன.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது கடந்த ஒரு வாரமாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த சாரல் மலையின் காரணமாக களைச்செடிகள் அதிகமாக வளர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும் ஏற்கனவே உள்ள களைச் செடிகளை அகற்ற வேண்டும் என்பதற்காகவும் அந்தந்த பகுதி வனத்துறையினர் களைச்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ஸ்ரீவில்லிபுத்தூர், புதுப்பட்டி, சாப்டூர், ராஜபாளையம் ஆகிய ரேஞ்சுகளில் களைச்செடிகள் அந்தந்த பகுதி வனத்துறையினர் துணையோடு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த பணியில் அவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். சில ரேஞ்சுகளில் முழுமையாக இந்த பணிகள் முடிவடைந்து விட்டது. சில ரேஞ்சுகளில் தொடர்ச்சியாக பணிகள் நடைபெற்று வருகிறது. ஐகோர்ட் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் களைச்செடிகள் அகற்றப்பட்டு வருகின்றன என தெரிவித்தனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் அந்நிய நாட்டு களைச்செடிகளை அகற்றி வரும் மலைவாழ் மக்கள்: வனத்துறையினருடன் இணைந்து பணி appeared first on Dinakaran.

Related Stories: